கிளாசிக்கல் டான்சராக இருந்து நடிகையாக மாறியவர் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஹாப்பி வெட்டிங்’ படத்தில் திரைத்துறையில் நுழைந்தார். தொடர்ந்து ‘லக்‌ஷ்யம்’, ‘மேட்ச்பாக்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் நடித்திருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலுக்கு மனைவியாக நடித்த ‘கும்பலாங்கி நைட்ஸ்’ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

Advertisment

இதையடுத்து தமிழில் ‘பறந்து போ’ படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது 8 மாதங்களில் 15 கிலோ குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் தான் சந்தித்த சவால்களை குறித்து பதிவிட்ட அவர், “80 கிலோவிலிருந்து 65 கிலோ வரை... இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. அமைதியான போராட்டம், அழுகை, சந்தேகம், கேள்வி என நிறைந்திருந்தது. ஆனால் போராட்டத்திற்கும் சிறிய வெற்றிகளுக்கும் இடையில் எனக்கே தெரியாத எனக்குள் இருக்கும் வலிமையை கண்டேன். தன்னம்பிக்கை குறைந்த போதும் விட்டுக் கொடுக்காத பெண்ணை கண்டுபிடித்தேன்.

Advertisment

எனக்கு நானே நன்றி கூற விரும்புகிறேன். எதிர்த்து போராடியதற்கும், ஒழுக்கமாக இருந்ததற்கும் என்னை நானே நம்பியதற்கும் நன்றி. நீங்கள் முயற்சித்தால் அதில் தொடர்ந்து பயணிங்கள், ஒருநாள் நீங்கள் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு சந்தேகமும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது என்பதை உணர்வீர்கள்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.