ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதத்தில் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் சினிமா, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், திரைப்படங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்தாண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் இடத்தில் இந்தி படமான ‘சயாரா’ படம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் கன்னடப் படமான ‘காந்தாரா சாப்டர் 1’ இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தமிழ் படமான ‘கூலி’ படம் இருக்கிறது. நான்காவது இடத்தில் இந்திப் படமான ‘வார்’ இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் இந்திப் படமான ‘சனம் தேரி கசம்’ இருக்கிறது. ஆறாவது இடத்தில் மலையாளப் படமான ‘மார்கோ’ இருக்கிறது. ஏழாவது இடத்தில் இந்திப் படமான ‘ஹவுஸ்ஃபுல் 5’ படம் இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/11-18-2025-12-04-19-26-32.jpg)
எட்டாவது இடத்தில் தெலுங்கு படமான ‘கேம் சேஞ்ஜர்’ படம் இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் இந்திப் படமான ‘மிஸஸ்’(Mrs.) இருக்கிறது. பத்தாவது இடத்தில் நான்கு மொழிகளில் வெளியான அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ படம் இருக்கிறது.
Follow Us