கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதர்ஸ்’. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில், இசையமைப்பாளர் ஜிப்ரான், “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார். 

Advertisment

நடிகை கௌரி கிஷன் பேசுகையில், “மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார். அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.