விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் அங்கம்மாள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகிறது. 

Advertisment

அந்த வகையில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கீதா கைலாசம் தனது கதாபாத்திரம் குறித்து பேசுகையில், “நான் பிறந்து வளர்ந்தது கிராமம் தான். நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. இந்தக் கதையை கேட்ட பிறகு ஒரு பொறுப்புணர்வு வந்தது போல் உணர்ந்தேன். அதே சமயம் பயமாகவும் இருந்தது. ஆனால் கதாபாத்திரத்திற்கான ஹோம் ஒர்க்கை செய்ய ஆரம்பித்தேன். 

Advertisment

புகைப்பிடிப்பது பழுவது தான் என்னுடைய முதல் ஹோம் ஒர்க். இதைப் பார்த்து பீடி பழக்கத்திற்கு அடிமையாகி விடாதேன்னு என்னுடைய பசங்களெல்லாம் திட்டினாங்க. படத்தில் காண்பிப்பது போல் நான் தைரியமான பெண் கிடையாது, என்னுடைய கேரக்டருக்கு நேர் ஆப்போசிட் தான் அந்த கேரக்டர் என்றார்.