நடிகர் கவுதம் ராம் கார்த்தி நாயகனாக நடிக்கும் படம் ரூட். இப்படத்தினை நாளைய இயக்குநர் சீசன் 1 மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சூரியபிரதாப் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை பவ்யா திரிகா, பாலிவுட் நடிகர் அபார்ஷக்தி குரானா ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisment

அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இதன் பர்ஸ் லுக் போஸ்டரை ரஜினிகாந்தைக் கொண்டு வெளியிட்டனர்.

Advertisment

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சூரிய பிரதாப் படம் குறித்த சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது...

09

ரூட் என்பது ரன்னிங் அவுட் ஆஃப் டைம் என்பதன் சுருக்கம் தான். இந்த தலைப்பை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, கிரைம் பாணியில் பார்த்தால் அடுத்த கொலை நடப்பதற்குள் குற்றவாளியை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற ரீதியிலும், இன்னும் சொல்லப்போனால் நேரத்தை தாண்டி ஓடிப்போக வேண்டும் என்பதும் ஆகும். மற்றொன்று, ரூட் என்றால் வேர் - ஒரு பிரச்சனையின் ஆணிவேர் என்பது என்னவென்று தெரிந்தால் தான் அதை சரி செய்ய முடியும். இந்த படத்தின் நாயகனின் பயணம் அப்படியானது தான். அந்த பயணம் எங்கே முடிகிறது என்பது படத்தின் இறுதியில் தான் தெரிய வரும்.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தினை திரையரங்கில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment