கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதர்ஸ்’. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் நாளை(07.11.2025) வெளியாகிறது.
இந்த நிலையில் படத்துக்கான சிறப்பு திரையிடல் இன்று திரையிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் சந்தித்த படக்குழுவினர் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது கௌரி கிஷனுக்கும் ஒரு யூடியூபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது முன்னதாக நடந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அந்த யூடியூபர், நாயகனிடம் கௌரி கிருஷ்ணனை படத்தில் தூக்கியது தொடர்பாக கௌரி கிஷனின் எடை எவ்வளவு என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அவரை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பார்த்து கௌரி கிஷன், ‘நீங்கள் அன்னைக்கு கேட்ட கேள்வி ரொம்ப அவமரியாதையான கேள்வி, அது ஜர்னலிசமே கிடையாது, என்னுடைய எடையை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க, பாடிஷேமிங் பன்னாதீங்க, படத்துக்கும் என்னுடைய வெயிட்டுக்கும் என்ன சம்பந்தம் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
உடனே யூடியூபர், ‘உங்களிடம் மோடியை பற்றியா கேட்க முடியும், குஷ்பு சரிதா என எல்லாருமே இந்த கேள்வியை எதிர்கொண்டவர்கள் தான்’ என பதில் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்பு கௌரி கிருஷ்ணன் இந்த இடத்தில் நான் மட்டும் தான் ஒரு பெண், மற்ற எல்லாரும் ஆண்கள் தான், நான் குறி வைக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார். பின்பு அந்த யூடியூபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கௌரி கிஷனிடம் சொல்ல பதிலுக்கு கௌரி கிருஷ்ணனும் நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்ல மீண்டும் வாக்குவாதம் தொடர்ந்தது. இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us