96 படம் மூலம் பிரபலமான கௌரி ஜி கிஷன், புதிதாக நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. இப்படம் கடந்த 7ஆம் தேதி திரைக்கு வந்தது. அதற்கு முந்தைய தினமான 6ஆம் தேதி, படத்தின் சிறப்பு திரையிடல் நடந்த நிலையில் அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.எஸ்.கார்த்திக் என்ற யூடியூருக்கும் கௌரி கிஷனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக அந்த யூடியூபர், படத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷனின் எடை குறித்து அநாகரிகமான முறையில் பட நாயகினிடம் கேள்வி கேட்டிருந்தார். அதாவது ஹீரோயினை தூக்கினீங்களே அவங்க எவ்ளோ வெயிட் இருந்தாங்க எனக் கேட்டார்.  

Advertisment

இந்தக் கேள்வியால் பாதித்துள்ள கௌரி கிஷன் சிறப்பு திரையிடல் செய்தியாளர் சந்திப்பின் போது, அந்த யூடியூபரை பார்த்து, “நீங்க அன்னைக்கு கேட்டது ரொம்ப அவமரியாதையான கேள்வி, அது ஜர்னலிசமே கிடையாது, ஏன் அப்படி கேள்வி கேட்டீங்க, என் எடைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம், இதே ஒரு ஆம்பளைய பார்த்து இந்த கேள்விய கேப்பீங்களா, நீங்க கேட்டது உருவக்கேலி...” என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார். பதிலுக்கு அந்த நிருபரும் உங்ககிட்ட வேற என்ன கேட்க முடியும், குஷ்பு, சரிதா என அனைவரும் இந்த கேள்வியை எதிர்கொண்டவங்கதான் என கடினமான குரலில் எதிர் விவாதத்தில் ஈடுபட்டார். 

Advertisment

இதையடுத்து அநாகரீகமாக கேள்வி கேட்ட அந்த யூடியூபரை கௌரி கிஷன் கண்டித்தது பலரது பாராட்டை பெற்றது. கௌரி கிஷனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித், குஷ்பு, கவின், அஞ்சு குரியன் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் எக்ஸ் பக்கம் வாயிலாக பதிவிட்டனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்டவை அந்த யூடியூபரின் செயலை கண்டித்து கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்த விவகாரம் பேசு பொருளாக மாற அடுத்து அந்த யூடியூபர் செய்தியாளர்களை சந்தித்து கௌரி கிஷன் இதை ஒரு விளம்பரத்திற்காக பண்ணுவதாகவும் அவரால் தான் உட்பட தன் குடும்பம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும் இதனால் அவர் முதலில் மன்னிப்பு கேட்டால் பின்பு தான் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து அவர் வருத்தம் தெரிவிப்பதாக வீடியோ வெளியிட்டார். அதில் என்னுடைய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவரை நான் உருவக்கேலி செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது வருத்தத்தை கௌரி கிஷன் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அவரின் வருத்த வீடியோவை மேற்கோள்காட்டி பேசிய அவர், “பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது மன்னிப்பு அல்ல. குறிப்பாக ‘அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி, நான் யாரையும் உருவக்கேலி செய்யவில்லை’ என பொறுப்புணர்வே இல்லாமல் சொல்கிறார். நடிப்பு வருத்தத்தையோ வெற்று வார்த்தைகளையோ நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் தெளிவாக சொல்ல வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisment