Advertisment

தீபாவளி ரேஸில் இணைந்த ‘கேம் ஆஃப் லோன்ஸ்’

31

ஜேஆர்ஜி புரொடக்‌ஷன் சார்பில்,  தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. இப்படத்தில் நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாகக் நடித்துள்ளார். எஸ்தர், ஆத்விக் உடன் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜோ கோஸ்டா பின்னணி இசையை அமைத்துள்ளார். 

Advertisment

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில்  எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக் லெஸ்லி கூறியதாவது, “லாக்டவுன் காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்கு தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன், ஏஐ யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் என குறும்படம் எடுத்தேன், அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது. லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன்  என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம்” என்றார். 

Movie tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe