இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'The U1niverse Tour'  என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இதில் முதல் நிகழ்ச்சியாக சென்னையில் வரும் 13ம் தேதி ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்நிகழ்ச்சியை நடத்தும் கேஒய்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இந்நிகழ்ச்சிக்காக அந்த நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனம் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் டிக்கெட் புக் செய்தவுடன் தங்களுக்கு வரும் மெட்ரோ பயண சீட்டை டிசம்பர் 13ஆம் தேதி மட்டும் மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தி இலவசமாக பயணித்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்கும் இந்த பயணச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு சுற்றுப் பயணத்திற்கு இரண்டு முறை நுழையவும் இரண்டு முறை வெளியேறவும் அந்த பயணச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment

போக்குவரத்து இடையூறை தடுக்கவும் தடையில்லா போக்குவரத்தை வழங்கவும் இந்த சிறப்பு சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேபோல் முன்பு ஏ ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி நடந்த பிறகு அவரது அடுத்த நிகழ்ச்சிக்கும் கூட்ட நெரிசல் அசம்பாவிதத்தை தடுக்க இச்சிறப்பு சலுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.