Advertisment

சீரியல் நடிகை மீது வழக்குப் பதிவு

14p

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ராணி. குறிப்பாக நெகட்டிவ் ரோலில் அதிகம் நடித்து கவனம் ஈர்த்தவர். இந்த நிலையில் இவர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கலை சேர்ந்த தினேஷ் ராஜ் என்பவர் இந்த புகாரை கொடுத்டுள்ளார். இவர் கரூரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இவர் கொடுத்த புகாரில், ‘நடிகை ராணியின் கணவர் பாலாஜி, தன்னிடம் 10 லட்சம் பணமும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரும் 5 சவரன் நகையும் வாங்கியுள்ளார். அதை திருப்பி கேட்டால் தர மறுக்கிறார். இதனால் அதை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என  தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த புகாரை பெற்றுக் கொண்ட கரூர் காவல்துறையினர் நடிகையோடு அவரது கணவர் பாலாஜி மற்றும் பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது மொத்தம் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை ராணி தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Actress f.i.r serial
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe