பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியானது.
பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு திரையரங்கில் போலி முதலைகளை ரசிகர்கள் கொண்டு வந்து கொண்டாடினர். படத்தில் பிரபாஸ் முதலைகளுடன் சண்டையிடுவது போல் ஒரு காட்சி இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒடிசாவில் பட்டாசு வெடுத்தும் விளக்குகளை ஏற்றியும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பிரபாஸின் அறிமுக காட்சியின் போது ஆரத்தி எடுத்தும் வழிபடுவது போல் கொண்டாடியுள்ளனர். இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் படம் பார்ப்பவர்களை தொந்தரவு செய்துள்ளது. இதனால் அவர்கள் பாதியிலே திரையரங்கை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/444-2026-01-12-12-51-01.jpg)