பராசக்தி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அதர்வா கூட்டணியில் உருவாகி வரும் படம் இதயம் முரளி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதோடு இயக்கியும் வருகிறார். இதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில்ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வரும் நிலையில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிவிப்போடு டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ஒரு தலை காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘தங்கமே தங்கமே’ எனும் பாடல் வெளியானது. கல்யாண கொண்டாட்டப் பின்னணியில் அமைந்திருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/15-60-2026-02-12-13-48-01.jpg)
திடீரென ஃபகத் ஃபாசில் இப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாரிசன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். முதல் முறையாக அதர்வா படத்திலும் நடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படம் கோடையில் வெளியாகவுள்ளதாக தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் படம் ஏப்ரலில் இருந்து தள்ளி போகிறதோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
When FaFa illuminated the sets of #IdhayamMurali ❤️
— DawnPictures (@DawnPicturesOff) February 12, 2026
The one and only #FahadhFaasil features in the @AakashBaskaran directorial, coming to cinemas this summer@Atharvaamurali@MusicThaman@AakashBaskaran@natty_nataraj@PreityMukundan@JustNiharikaNm@11Lohar@manojdft… pic.twitter.com/L3K7iJ4LBO
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/16-55-2026-02-12-13-45-20.jpg)