தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இளம் வயதிலேயே இசையமைப்பாளராகத் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். தனது முதல் திரைப்படமான 3 திரைப்படத்தின் மூலமாகத் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இந்த படத்தின் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் உலக அளவில் பிரபலமானது. அதனால், இவர் தமிழ் சினிமாவில் இளைஞர்களிடையே பெருமளவில் கவனம் பெற்றார். இதையடுத்து, எதிர்நீச்சல் படத்திற்கு இசையமைத்திருந்தார், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத் தக்க அளவிலான வெற்றியைப் பதிவு செய்தன. இதைத்தொடர்ந்து, கத்தி, மாரி, வேலைக்காரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து அமைத்துள்ளார்.
தமிழைத் தவிர்த்துப் பிற மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது. சமூக வலைதளத்தங்களில் கவனம் பெற்று வருகிறது. அதாவது, "நான் சிறிய வயதில் இருக்கும் போது, திருமண நிகழ்ச்சிகளில் இசை வாசிக்கச் செல்லும் காலங்களில் சம்பளமாக 500 ரூபாய் தருவார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோசம் இருக்கும். சில நேரங்களில் சம்பளம் கொடுக்காமல், வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இப்போது, இசைப்பணியில் பரபரப்பாக மூழ்கி இருக்கிறேன். கோடிகளில் சம்பளம் வாங்குகிறேன். இருந்த போதிலும், அப்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. தற்போது, இசைப்பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், அந்த இளம் பருவ காலத்தில் இருந்த மகிழ்ச்சியான நாட்களை மட்டும் மறக்கவே முடியாது" என்று கூறியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைவரிடமும் கவனம் பெற்றுவருகிறது.
Follow Us