அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். 

Advertisment

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் தாய் கிழவி படம்” என்றார்.