சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் ‘கார்த்தி உனவகம்’ என்ற பெயரில் தினமும் ரூ.10க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவகம் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி 500வது நாளை தொட்டது. இப்போது 1000வது நாளை தொட்டுள்ளது. 

Advertisment

இந்த 1000வது நாளில் நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன் கலந்து கொண்டு மக்களுக்கு உணவு வழங்கினார். இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எளியோர்க்கு மிகக் குறைந்த விலையில் மதிய உணவு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் 1000வது நாள் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.10,000க்கு மேல் செலவாகும். 

Advertisment

12 (26)

இந்த அரும்பணியை மன்றத்தினர் எப்படி இத்தனை வருடங்களாக செய்கிறார்கள் என வியந்து போனேன். ‘தினமும் 200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்கள் பயன்பெறும் இந்த ஆக்கப்பூர்வ எண்ணத்தைச் செயல்படுத்த எப்படி தோன்றியது?’ என மாவட்ட தலைவர் சுப்புராஜிடம் கேட்டேன். கையில் பச்சை குத்தியிருந்த கார்த்தி சாரின் உருவத்தைக் காட்டி, இதுதான் பதில் என்பதுபோல் சிரித்தார். தரமான பிள்ளைகளைக் களத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள் கார்த்தி சார். வள்ளலாரின் அணையா அடுப்பாய் இந்த அரும்பணி நீளட்டும்; எளியோர் வயிறு குளிரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.