Advertisment

“விரைவில் நற்செய்தி” - ‘நந்தன்’ இயக்குநர் சரவணன் அறிவிப்பு!

19 (60)

சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில் உருவாகியிருந்த இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும் அரசியல் வசனங்களுடனும் அமைந்திருந்தது. 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தாண்டி, நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் இயக்குநர் கோபி நயினார், பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை திரையிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அப்டேட் வெளியாகியுள்ளது. பட இயக்குநர் சரவணன், நாயகன் சசிகுமார் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “முழுக்க முழுக்க ‘நந்தன்’ படம் குறித்த பேச்சுதான்… ‘நந்தன் 2’ எடுக்க மூவருமே தயார்… விரைவில் நற்செய்தி” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் நந்தன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.  

Director Era Saravanan samuthirakani Sasikumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe