தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஈஷா ரெப்பா. ஆரம்பக் கட்டங்களில் மாடலாக பணியாற்றிய இவர், ‘லைஃப் இஸ் பியூடிபுல்’ என்ற படத்தின் மூலமாகத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தனது திறமையின் மூலமாகத் தெலுங்கு சினிமாவில் முக்கிய இடம் பிடித்த இவர், தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், ஒய், ரெண்டகம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படம் வெளியானது. தருண் பாஸ்கர் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னை பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் ஆபாச மற்றும் அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாக, ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘என்னுடைய புதிய படங்கள் சம்பந்தமான விழாக்களில், நான் கலந்துகொண்ட போது வெளியான புகைப்படங்கள் மற்றும் நான் பேசிய கருத்துக்களை, சிலர் அவதூறாகத் திரித்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தன்னை பற்றி ஆபாச கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால், தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை, காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Follow Us