Advertisment

புட்டபர்த்தி சாய்பாபா பயோ பிக்; வாழ்த்திய துர்கா ஸ்டாலின்!

dur

தமிழ் சினிமா வரலாற்றில் சில  படங்கள் காலம் கடந்த காவியங்களாக மாறிவிடுவது வழக்கம். உதாரணமாக ரத்தக்கண்ணீர், கரகாட்டக்காரன்  போன்ற படங்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்திருந்தாலும், அதில் காலம் கடந்த நிற்கும் படங்களாக சில  படங்களைக் கூறலாம். அவற்றில் மிக முக்கியமான படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகும். இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இது போக வீரா, பாபா போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவ்வாறாக பல வெற்றிப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் படம் இயக்கியுள்ளார். 

Advertisment

அவர் இயக்கிய அந்தப் படத்திற்கு "அனந்தா" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  தேவா இசையமைத்துள்ளார் . இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில்  நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் தேவா, கலைப்புலி தாணு, பாடலாசிரியர் பா விஜய், நடிகை சுஹாசினி, பாடகர் மனோ, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய்  போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். துர்கா ஸ்டாலின் படத்தின் டீசரை வெளியிட்டதோடு, அப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

durga stalin Sai Baba suresh krishna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe