ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான இந்தி படம் துரந்தர். இதில் தெய்வத்திருமகள் பட புகழ் சாரா அர்ஜுன் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இது சற்று விமர்சனத்தை கிளப்பியது. அதாவது 40வயது நடிகருடன் 20வயது நடிகை ஜோடியாக நடிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். 

Advertisment

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பலை ஸ்பையாக செல்லும் ரன்வீர் சிங் எப்படி அழிக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் இப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று வளைகுடா நாடுகளான பக்ரைன், குவைத் ஓமன், கத்தார், சவுதி அரேபியாஉள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் நாளை நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வைரலானது. இதனால் ரசிகர்கள் பலரும் அது உண்மை என நம்பினர். ஆனால் சம்பந்தப்பட்ட ஓடிடி தளம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் அந்த போஸ்டர் ரசிகர்கள் உருவாக்கியது என கூறப்படுகிறது.