Advertisment

‘துரந்தர்’ படம் புது சாதனை!

476

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தி படம் துரந்தர். இதில் தெய்வத்திருமகள் பட புகழ் சாரா அர்ஜுன் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இது சற்று விமர்சனத்தை கிளப்பியது. அதாவது 40வயது நடிகருடன் 20வயது நடிகை ஜோடியாக நடிக்கலாமா என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். 

Advertisment

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பலை ஸ்பையாக செல்லும் ரன்வீர் சிங் எப்படி அழிக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று வளைகுடா நாடுகளான பக்ரைன், குவைத் ஓமன், கத்தார், சவுதி அரேபியாஉள்ளிட்ட நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 831 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த இந்தி படமாக இப்படம் மாறியுள்ளது. இதற்கு முன்பு புஷ்பா 2 படம் இந்தி வெர்ஷனில் மட்டும் ரூ.821 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Bollywood ranveer singh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe