‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ எனும் படத்தில் நடித்துள்ளார். அவரே தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டது. இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றன. இந்த நிலையில் டைட்டில் கிளிம்ஸுக்கு கிடைத்த வரவேற்புக்கு இயக்குநர் துரை செந்தில்குமார் நன்றி தெரித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “லீடர் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு, ஆச்சரியமாகவும் உண்மையிலேயே மனதைக் நெகிழவும் செய்தது. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இது முழு குழுவிற்கும் நிறைய அர்த்தத்தை கொடுக்கிறது.
லீடர் படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்ற முறையில், வலுவான ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளுடன் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். லெஜண்ட் சரவணன் சாருக்கு ஒரு புதிய, துணிச்சலான அவதாரத்தை வடிவமைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனது இயக்கத்தின் மூலம் அவரது திறமையின் புதிய பக்கங்களை வெளிப்படுத்துகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கு மிகவும் முக்கியம், அதை இப்படம் பூர்த்தி செய்யும் என உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/13-38-2026-02-09-19-39-47.jpg)