சமீபத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர், இருவரும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இதனை சீதா ராமம் 2 பட புகைப்படம் என்றும் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது. ஆனால் படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் அப்படி வெளியாகவில்லை. இதனால் இந்த புகைப்படம் எதற்கானதாக இருக்கும் இருவரும் இணைந்து வேறுயதாவது புது படம் நடிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. 

Advertisment

இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது இருவரும் இணைந்து ‘பீகி பீகி’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்த ஆல்பத்திற்காகத்தான் அந்த புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த ஆல்பத்திற்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் அவரது மகன் ஏ.ஆர். அமீன் பாடியுள்ளார். ஜஸ்லீன் ராயலும் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இர்ஷாத் காமில் வரிகள் எழுதியுள்ளார். 

Advertisment

இந்த ஆல்பம் எதிர்காலத்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மானும் மிருணாள் தாக்கூரும் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு ட்ராவல் செய்யும்படி காட்சிகள் அமைந்திருந்தது. இருவருக்கும் சீதா ராமம் படப் போலவே நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருந்தது. இந்த பாடல் தற்போது அந்த பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.