துல்கர் சல்மான் கடைசியாக லக்கி பாஸ்கர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கல்யாணி பிரியதர்ஷின் நடித்த ‘லோகா’ படத்தை தயாரித்து அதில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படமும் பெரும் வெற்றி பெற்று மலையாளத் திரையுலகில் சாதனை படைத்தது. அதாவது அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக இப்படம் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. இப்படத்தை தவிர்த்து காந்தா படத்தில் அவர் நடித்த முடித்துள்ளார். இப்படம் வருகிற 21 ஆம் தேதிக்கு ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதை தவிர்த்து தெலுங்கில் இரண்டு படமும் மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.
திரைப்படத்தை தாண்டி சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் துல்கர் சல்மான் இருந்து வருகிறார். அந்த வகையில் ரோஸ் பிராண்ட் என்ற பிரியாணி அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வந்தார். இது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் சேவை நடத்தும் ஜெயராஜன் என்பவர் ஒரு திருமண விழாவிற்காக ரோஸ் பிராண்ட் பிரியாணி அரிசியை 50 கிலோ மூட்டையை வாங்கி உள்ளார். ஆனால் அந்த அரிசி மூட்டையில் காலாவதி தேதி இல்லாமல் இருந்துள்ளது. மேலும் அந்த அரிசியால் செய்யப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட விழா விருந்தினருகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பத்தனம்திட்டா நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் அந்த கேட்டரிங் நடத்துபவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், இந்த சம்பவம் தனது தொழில் நம்பிக்கையை மக்களிடம் சேதப்படுத்தியதாகவும் இதனால் பல திருமண நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அரிசி செலவுக்காக ரூ.10,250ம் நீதிமன்ற செலவுக்காக கூடுதலாக ரூ.5 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனால் அந்த பிரியாணி அரிசியின் நிர்வாகிகள், துல்கர் சல்மான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைவரும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் ஏற்கனவே சமீபத்தில் கார் இறக்குமதி மோசடி தொடர்பான வழக்கில் சிக்கினார். இப்போது புது சிக்கலில் சிக்கியுள்ளார்.
Follow Us