பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதே சமயம் சமூக வலைதளங்களில் சிலரால் விமர்சிக்கவும் பட்டது. இப்படத்தை ரசிகர்களை தவிர்த்து அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் படத்தை பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்கில் வரவவேற்பை பெற்ற இப்படத்தை ஓடிடியிலும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.