'Dude' in Diwali Race Photograph: (dude movie)
திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார்.
'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் 'டியூட்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல் லுக் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் உள்ள நவீன் யெர்நேனி மற்றும் Y.ரவி சங்கர் ஆகியோர் இப்போது டியூட் படத்தை தயாரிக்கின்றனர் . "பிரதீப்பின் பிரபலத்துக்கு எல்லைகள் தாண்டி வர்த்தக வரவேற்பு இருக்கிறது. படத்தின் பூஜை நாள் முதலே வியாபாரரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது" என அவர்கள் கூறுகின்றனர்.
2025 தீபாவளி ரிலீஸாக இருக்கிற டியூட் ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாகும். புதிய இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். சமீபமாக இளைய நெஞ்சங்களை தன் இசையால் கொள்ளைகொண்ட இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் ,நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி உடை அலங்காரத்தில், பரத் விக்ரமன் எடிட் செய்ய , லதா நாயுடு தயாரிப்பு நிர்வாகத்தை கையாளுகிறார் .