த்ரிஷ்யம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது. இப்படம் குறித்து பேசிய மோகன்லால், “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார்” என்றார்.
இந்த நிலையத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட மோகன்லால், “ஆண்டுகள் கடக்கலாம், கடந்த காலம் மாறாது” என குறிப்பிட்டு ஒரு முன்னோட்டத்தையும் வெளியிட்டுள்ளார். முதல் பாகம் திரையரங்கிலும் இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
Follow Us