Advertisment

“போற்றப்பட்ட வேண்டியது வீரம் மட்டுமல்ல... பெண்களின் தியாகமும் தான்”- வெளியான ‘திரௌபதி 2’ ட்ரெய்லர்

446

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது பொங்கலை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இப்படம் ஆறு அண்ணல் கண்டர் எழுதிய ‘திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு’ புத்தகத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என டிஸ்க்ளைமர் போடப்பட்டுள்ளது. பின்பு படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்க, தொடக்கத்தில், ‘நெருப்பில் இருந்து பிறந்தவள் அந்த திரௌபதி, அந்த தீச்சுடரின் பெயரை எனக்கு சூடியதன் காரணத்தை இன்று நான் அறிந்தேன்’ என ரக்ஷனா இந்துசூடன் மக்களிடம் சொல்ல பின்பு நாயகன் கதாபாத்திர அறிமுகம் காட்டப்படுகிறது. வீர சிம்ம காடவராயன் என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி வருகிறார். 

Advertisment

இதை தொடர்ந்து ‘இந்துஸ்தானின் கலாச்சாரப் பரப்பில் சுல்தானியர்கள் நிகழ்த்திய ஒரு தீராத அதிர்வு’ என்ற வாசகங்கள் வர, பின்பு சுல்தானிய மன்னர்கள் அவர்களின் நம்பிக்கையை இந்து மக்களிடம் திணிப்பதும் போலவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களை கொலை செய்வது போலவும் காட்சிகள் வருகிறது. பின்பு இரு மன்னர்களிடையே நடக்கும் மோதலில் யார் இறுதியில் வென்றார்கள் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த போராட்டத்தில் பெண்களின் தியாகம் முக்கிய பங்கு வகிப்பது போலவும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதை குறிக்கும் வகையில் “போற்றப்பட்ட வேண்டியது வீரம் மட்டுமல்ல... பெண்களின் தியாகமும் தான்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.  

Draupathi 2 mohan g
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe