மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment

முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான ‘எம்கோனே’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. அதாவது இப்பாடலை பாடிய சின்மயி என்னுடைய கொள்கைக்கும் இதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது, அதற்காக வருந்துகிறேன். இதற்கு பதிலளித்த மோகன் ஜி, பொதுவெளியில் எந்த முகாந்திரமும் இல்லாமல் கலங்கம் ஏற்படுத்தியிருக்கிறார் எனக் கூறியிருந்தார். மேலும் இது குறித்து பதிலளிக்க இயக்குநர் சங்கத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அப்பாடலில் சின்மயி குரலை நீக்கிவிட்டு வேறஒரு பாடகியின் குரலை பயன்படுத்தியுள்ளார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக கவனித்து வருகிறது. அந்த வகையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.