சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டீசல்’. எஸ்.பி.சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. இதில் இருந்து வெளியான ‘பீர்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு 17ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் குறித்து இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி கூறுகையில், “நாம் வெறும் வண்டிக்கு பெட்ரோல், டீசல் போடுவதோடு நிறுத்திவிடுகிறோம். ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய உலகம் இருக்கிறது. அதில் இருக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வைத்து கதை எழுதியுள்ளேன். அதற்காக ஏழு வருடங்கள் உழைத்துள்ளேன். நான் ஒரு 40 சதவீதம் தான் அதன் பின்னால் இருக்கும் அரசியலை தொட்டிருக்கிறேன். மீதமுள்ளதை தொட்டால் அது சர்வதேச குற்றப்பின்னணியாக இருக்கும்” என்றார். 

Advertisment