நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டு வரவுள்ளது.  இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. 

Advertisment

நிகழ்வில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும். 

Advertisment

25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்‌ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்