தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 

Advertisment

இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

Advertisment

06 (21)

இந்த நிலையில் ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் பட இயக்குநர் கௌதம்ராஜ் இந்த அறிவிப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு. வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு முதல்வரின் பக்கம், துணை முதல்வரின் பக்கம் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷின் பக்கம் ஆகியவற்றை டேக் செய்துள்ளார். 

Advertisment