‘நந்தன்’ பட இயக்குநர் இரா சரவணன், சமீபத்தில் தான் எழுதிய ‘சங்காரம்’ புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இதனை தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து ‘சங்காரம்’ நூலை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். ஷூட்டிங் பிரேக்கில் எவ்விதமான பரபரப்பையும் காட்டிக் கொள்ளாமல், அவர் உரையாடியது ஆச்சர்யமாக இருந்தது. முதன்முறையாக ‘நந்தன்’ குறித்துப் பேசினார். ‘நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய படம்…’ என்றவர், அவர் மனதில் பட்ட மாற்றுக் கருத்துகளையும் சொன்னார். இன்னொரு சந்திப்பில் ‘நந்தன்’ குறித்து நிறைய பேச வேண்டும் என்றார்.
‘நந்தன் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் கலையரசன், அண்ணன் பரமு மூலமாக முதலில் உங்களைத்தான் கேட்டேன். உங்களால் முடியாத பட்சத்தில்தான் வேறு ஆட்களை நாடினேன்’ என்றேன். ‘என்னைய நடிக்கக் கேட்டீங்களா… என்னங்க நீங்க..?’ எனச் சிரித்தார். ‘சங்காரம்’ நாவல் எப்போது படமாகிறது என ஆவலுடன் கேட்டார். சசிகுமார் தொடங்கி மணல்மேடு சங்கர் வரை பேசினோம். இதற்கு மேலும் படப்பிடிப்பிற்கு இடையூறாகிவிடக் கூடாது என நன்றி கூறிக் கிளம்பினேன். சில நிமிடச் சந்திப்புதான்… நெஞ்சத்தின் சிலிர்ப்பு அடங்கத்தான் நிறைய நேரம் பிடிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/16-63-2026-02-21-16-56-50.jpg)