எவிடன்ஸ் என்ற அமைப்பின் மூலமாக மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எவிடென்ஸ் கதிர். மதுரையை மையமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆவார். ஐரோப்பிய கவுன்சில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் ரவுல் வாலன்பெர்க் விருதினை 2022-ஆம் ஆண்டு பெற்றார். ஏற்கனவே சாதி தேசத்தின் சாம்பல் பறவை என்ற புத்தகம் எழுதியிருக்கும் நிலையில், தற்போது கறுப்பு ரட்சகன் என்ற நாவல் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இந்த நிகழ்வில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன் கலந்து கொண்டார்.

Advertisment

நிகழ்வில் இயக்குநர் இரா.சரவணன் பேசியதாவது “ரஜினிகாந்த் சமூக புரட்சி செய்தார். அப்படின்னா அவர் என்ன புரட்சி பண்ணாரு?... வந்தாரு, நடிச்சாரு, சம்பாரிச்சாரு, அரசியலுக்கு வரேன்னாரு. அப்புறம் வரலன்னாரு. சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கினாரு. அவ்வளவு தானே, அதுல என்ன சமூக புரட்சி என்று நீங்க நினைக்கலாம். ஆனால் அதுல உண்மையான ஒரு சமூக புரட்சி இருக்கு. காரணம் பணம் வச்சிருக்கறவன் தான் பந்தா பண்ண முடியும். ஆடம்பரமா இருக்கறவன்தான் ஸ்டைல் பண்ண முடியுங்கிற ஒரு காலகட்டம் இருந்தது.சாதாரணமானவங்க  எல்லாம் ஸ்டைல் பண்ண முடியாது.

Advertisment

c1Ewd0Os

அந்த கால கட்டத்துல உள்ள நடிகர்களாக இருக்கட்டும். அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் வந்து அவங்க ஸ்டைல் பண்ணாங்கன்னா அந்த ஸ்டைல நீங்க பிரதிபலிக்கணும்னா உங்களுக்கு ஒரு கார் வேணும், ஷூ வேணும், கண்ணாடி வேணும், கோட் ஷூட் வேணும். ஆனா ரஜினிகாந்த் வந்த பிறகு நீங்க ஸ்டைல் பண்ண வேணும்னா தலையில முடி இருந்தா போதும் கையில விரல் இருந்தா போதும் ஒரு கர்சிப்ப கட்டினா அதான் ஸ்டைல், கிழிஞ்ச சட்டையா இருந்தாலும் இருக்கி கட்டினா அதான் ஸ்டைல், யாரு வேணாலும் இந்த ஊர்ல ஸ்டைல் பண்ணலாம்ங்கற நிலையை உருவாக்குனது தமிழ்நாட்டில ரஜினிகாந்த் தான். இந்த பார்வை நம்ம யாருமே பார்த்திருக்க மாட்டோம் ஆனா அப்பேற்பட்ட ஒரு சமூக புரட்சிக்கு வித்திட்டவர் ரஜினிகாந்த்.

இன்றைக்கு அரசியலில் பின்புலம் உள்ளவர்கள், பெருமை கொண்டவர்கள், பெரிய அளவுக்கான பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள், அப்படித்தான் அரசியலுக்கு வர முடியுங்கிற காலகட்டத்தை உடைச்சு, மனசுல, நெஞ்சில நேர்மையும் உண்மையும் இருந்தா யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம்னு நிரூபிச்சு கடைக்கோடி மக்களுக்கான கடைசி நம்பிக்கையா இருக்கிறவர் திருமா மட்டும் தான். சினிமாவில் அப்பேற்பட்ட புரட்சி செய்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்னா அரசியல்ல அப்பேற்பட்ட புரட்சி செஞ்ச அண்ணன் திருமாதான் சூப்பர்ஸ்டார்” என்று புகழ்ந்து பேசினார்.

Advertisment