இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இசை திரைப்படத்திற்குப் பிறகு கில்லர் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த படத்திற்கான 3ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னை பாலவாக்கம் அருகே நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாகச் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

Advertisment

அப்போது அங்குக் கட்டப்பட்டிருந்த கயிறு மூலம் எஸ்.ஜே சூர்யா இறங்குவது போன்று காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது எஸ் ஜே சூர்யா தவறி விழுந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் இரு கால்களும் கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் எஸ்.ஜே.சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு இரு கால்களிலும் தையல்கள் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் எஸ்.ஜே. சூர்யாவை 15 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக 15 நாட்கள் படப்பிடிப்பு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.