பொங்கல் பண்டிகையையொட்டி, உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் சுமார் 1,000 காளைகளும், 5,00 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2ஆம் இடம் பிடிக்கும் காளைகளுக்கு பைக்கும், காளையர்களுக்கு இ-ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

Advertisment

இப்போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்தார். வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் அடக்கி விளையாடி வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து மகிழ்ந்தார். அதனை தொடர்ந்தும் போட்டியின் போதே எழுந்து நின்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு வேலை தரப்படும் என அறிவித்தார். 

Advertisment

இந்த அறிவிப்பு தற்போது வெகுவாக ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் அமீர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது, “விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதை மாநில அரசும் ஒன்றிய அரசும் முன்னுரிமை அடிப்படையில் செய்து வருகிறது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு போட்டியாக நம் அரசு அறிவித்திருந்திருந்தது. அதன் அடிப்படையில் நானே மூணு வருடத்துக்கு முன்பு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி” என்றார்.