Advertisment

நெப்போட்டிஸம் குறித்து மனம் திறந்த துருவ் விக்ரம்

09

மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் நடக்கும் சாதிய பிரச்சனைகளையும் பேசியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். 

Advertisment

இதனிடையே இப்படம் தெலுங்கில் வருகின்ற 24ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் துருவ், கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் வாரிசு நடிகராக இருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு வருகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆம், நான் ஒரு வாரிசு நடிகர் தான். அதனால் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், மக்கள் என்னை ஒரு உண்மையான நடிகனாக ஏற்றுக்கொள்ளும் வரை நடிப்பேன். அவர்கள் என்னை நேசிக்கவும், நான் இந்திய சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கவும் கடுமையாக உழைப்பேன்” என்றார். 

dhruv vikram Bison
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe