சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடுத்து வைத்து, கடுமையான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டவர் நடிகர் தனுஷ். இருப்பினும், காலப்போக்கில் தனது அயராத உழைப்பாலும், விட முயற்சியாலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மாறினார். அதோடு, நடிப்பு மட்டுமின்றி பாடல் படுவது, பாடல் எழுதுவது படத்தை இயக்குவது என, சினிமாவில் தனது பன்முக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார்.
அந்த வகையில், தெலுங்கில் உருவான படம் தான் "குபேரா". இந்த படத்தில், நாகார்ஜூனா, ரஷ்மிகா, சுனைனா மற்றும் ஸ்ராவணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. வருகின்ற ஏப்ரல் மாதம் படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், படத்தை வெளியிடுவதற்கான ப்ரமோஷன் பணிகள் மற்றும் படத்தின் வெளியீடு தேதி குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/k-2026-02-07-15-18-31.jpeg)