ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்‌ஷன்’ தயாரித்துள்ள இப்படத்தில் க்ரீத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஷ்மான் இசையமைத்துள்ளார். இவரில் இசையில் அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக வெளியான முதல் சிங்கிளான ‘ஓ காதலே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisment

இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது. முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் ஆரம்பத்தில், விமானப்படை அதிகாரியாக வேலை செய்கிறார் தனுஷ். அவரைப் பார்க்க க்ருத்தி சனோன் செல்ல இருவரும் எமோஷ்னலாக பார்த்துக் கொள்கின்றனர்.

Advertisment

பின்பு இருவருக்கும் கடந்த காலத்தில் காதல் இருப்பது அடுத்த கட்ட காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் க்ருத்தி சனோனுக்கு வேறொரு நபருடன் கல்யாணம் நடக்க அதில் தனுஷ் சென்று பிரச்சனை செய்கிறார். அதனால் அவர் சிறைக்கும் செல்வது போல் தெரிகிறது. பின்பு திரும்பி வந்து காதலை மறந்துவிட்டு விமானப்படையில் பொறுப்புள்ள அதிகாரியாக வேலை செய்து வருகிறார். ச்இடையில் காதல் தோல்வியால் க்ரித்தி சனோன் கடும் பாதிப்படைந்து புகைப்பழக்கம் மதுப்பழக்கம் ஆகியவைக்கு அடிமையாகிறார். இறுதியில் தனுஷ் - க்ருத்தி சனோன் காதல் வெற்றி பெற்றதா, என்பதை காதல் கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.