தனுஷ் கடைசியாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்திருந்தது. இதற்கு முன்பாக ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம், இளையராஜா பயோ-பிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அப்துல் கலாம் பயோ-பிக் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘கர’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆக்ஷன் த்ரிலர் ஜானரில் உருவாகியுள்ளது. படத்தின் டைட்டில் ரிலீஸ் வீடியோ கடந்த பொங்கலன்று வெளியாகியிருந்தது.
அந்த வீடியோவில் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வரும் கோடையில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ரிலீஸ் தேதி வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
Follow Us