டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷே இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் கடந்த 1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களை தாண்டி அரசியல் கட்சியினரும் பாராட்டுத் தெரிவித்தனர். நாம் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனுஷிற்கு பாராட்டு தெரிவித்தார். பின்பு அமைச்சர் மா.சுப்புரமணியன், குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஷோவில் கலந்து கொண்டார். அடுத்து பாஜக தரப்பில் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படத்தை திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Follow Us