சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அவர் பேசுகையில், “நான் ஸ்கூல் படிக்கும்போது எப்படா காலேஜ் போய் கட் அடிக்கலாம்னு நினைப்பேன். ஆனா காலேஜ் போக முடியல, நடிக்க வந்துட்டேன். ஆனா என்னுடை நண்பர்கள் காலேஜ் முடிச்சுட்டு எப்படா வேலைக்கு போய் வாழ்க்கைய வாழலாம்னு நினைச்சாங்க. ஆனா அதையும் தாண்டி வாழ்க்கைக்குள்ள போன பிறகு தான் தெரியும் ஸ்கூலும் காலேஜும் எவ்வளவு முக்கியம்னு.
வாழ்க்கையில ரெண்டு முக்கியமான விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க. ஒன்னு மெடிடேஷன். இன்னொன்னு மேனிஃபெஸ்டேஷன். மெடிடேஷன், நீங்க போகணும்னு நினைக்கிற இடத்துக்கு உங்கள கூட்டிட்டு போகும். மேனிஃபெஸ்டேஷன் அதை ரியாலிட்டியா மாத்தும். மேனிஃபெஸ்டேஷன்னா... நம்ம அடைய வேண்டிய இடத்தை அடைஞ்சுட்டதா நம்பி அதுக்காக உழைக்கணும் அவ்வளவுதான்” என்றார்.
தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகிறது. இதை தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம், இளையராஜா பயோ-பிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அப்துல் கலாம் பயோ-பிக், வட சென்னை 2 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Follow Us