ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்ஷன்’ தயாரித்துள்ள இப்படத்தில் க்ரீத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது.
இந்த நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் குறித்து தனுஷ் சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “நான் ஆனந்திடம் ஏன் என்னை தொடர்ந்து காதல் தோல்வி கதாபாத்திரத்திற்காகவே அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய முகம் அந்த கதாபாத்திரத்திற்கான முகமாகவே இருப்பதாக கூறினார். பின்பு நான் வீட்டிற்கு சென்று என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். பின்பு அதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/18-19-2025-11-24-13-14-15.jpg)