ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்‌ஷன்’ தயாரித்துள்ள இப்படத்தில் க்ரீத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரhமான் இசையமைத்துள்ளார். இவரில் இசையில் அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக வெளியான முதல் சிங்கிளான ‘ஓ காதலே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisment

இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது. முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது. முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவவேற்பை பெற்றுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ், க்ரித்தி சனோன், ஆனந்த் எல் ராய் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது தனுஷிடம் ஒரு செய்தியாளர், “உங்களை பொறுத்த வரை காதல் என்றால் என்ன” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், “எனக்கு தெரியவில்லை. ஆனால் காதல் என்பது இன்னொரு மிகைப்படுத்தப்பட்ட ஒரு எமோஷன்” என்றார். இவரது பதில் அரங்கத்தில் வியப்பை ஆழ்த்தியது.