ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்‌ஷன்’ தயாரித்துள்ள இப்படத்தில் க்ரீத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நாளை(28.11.2025) வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வாரணாசியில் உள்ள கங்கை கறைக்கு தனுஷ், க்ரித்தி சனோன் மற்றும் ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சென்றனர். அங்கு தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன், கங்கா ஆரத்தி செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

Advertisment

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், “பனாரஸ்(வாரணாசி) இல்லாமல் ஆனந்த் எல். ராயால் எந்தப் படத்தையும் எடுக்க முடியாது என நினைக்கிறேன். பனாரஸ் எப்போதும் எங்கள் படத்தின் ஒரு பகுதியாகும். நாங்களும் பனாரஸின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இந்தப் படத்திற்கும் பனாரஸுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த இடமும் அதனுடன் இருக்கும் தொடர்பும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றார்.