Advertisment

தனுஷ் லைனப்பில் மாற்றம்; தள்ளி போகும் மாரி செல்வராஜ் படம்

415

தனுஷ் கடைசியாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்திருந்தது. இப்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம், இளையராஜா பயோ-பிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அப்துல் கலாம் பயோ-பிக் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

Advertisment

இதில் ‘கர’படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகிறது. ராஜ்குமார் பெரியசாமியின் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தனுஷின் 55வது படமாக உருவாகிறது. இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தை அடுத்து தனுஷின் 56வது படமாக மாரி செல்வராஜ் படம் இருக்கும் என கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக பெரிய அப்டேட் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ், படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் என்னுடைய முந்தைய படங்களின் தொடக்கத்தை கண்டுபிடித்து அதை முழுவதுமாக அழித்தால் எப்படி இருக்கும் என்பதே இப்படத்தின் கதைக்கரு எனத் தெரிவித்தார். 

Advertisment

இந்த நிலையில் தனுஷின் 56வது படமாக தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து “கெளம்பியாச்சு” என்ற வாசகத்துடன் தனுஷின் 56வது பன்பதை குறிக்கும் வகையில் ‘டி56(D56)’ என்ர ஹேஷ்டேக்கை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வரவேற்றுள்ளது. இந்நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த அறிவிப்பால் மாரி செல்வராஜ் படம் தள்ளிப்போவதாக தெரிகிறது.   

Tamizharasan Pachamuthu mari selvaraj actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe