அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லாக்டவுன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சார்லி, நிரோஷா உள்ளிடடோர் நடித்துள்ளனர். இசையை பொறுத்தவரை என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விப்பின் ஆகியோர் கவனித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியாக திட்டமிட்டிருந்தது. ஆனால் கனமழைக் காரணமாக தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அதே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புது தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜனவரி 30ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை நடிகை தேவயானி சிறப்பு திரையிடலில் பார்த்துள்ளார். பின்பு படம் குறித்து பேசிய அவர், “படம் ரொம்ப எமோஷ்னலா இருக்கு. அனுபமா ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. டைட்டிலே பார்த்தீங்கன்னா, உன்மை சம்பவத்த வச்சி இந்த படத்த எடுத்திருக்காங்க. லாக்டவுன் சமயத்துல ஒரு பெண்ணோட போராட்டம் தான் கதை. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
Follow Us