சமுத்திரம், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சபேஷ். இவர் தனது சகோதரரான முரளியுடன் இணைந்து இசையமைத்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சபேஷ் பாடகராகவும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தேவா இசையில் ஹிட் பாடல்களான ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டம்’, ‘கொத்தால் சவடி லேடி...’ உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார். சமீப காலமாக குறைவான படங்களிலே பணியாற்றி வந்தார். இதனிடையில் இசையமைப்பாளர்களின் சங்கத்தின் தலைவராகாவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் உடல்நலக்குறைவால் இன்று காலாமகியுள்ளார். இவரது உடல் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் சபெஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சபேஷின் சகோதரர் தேவா தற்போது அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது சகோதரர் பிரிந்த சோகத்தில் மனமுடைந்து அஞ்சலி செலுத்தினார். அதே போல் நடிகர் ஜெய்யும் ஆழ்ந்த சோகத்தில் அஞ்சலி செலுத்தினார். இவர் சபேஷின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர்த்து தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, பாடகர் மனோ உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/23/10-1-2025-10-23-19-17-18.jpg)