Advertisment

“68 வருஷத்துல ஒரு மணிநேரம் தான் சபேஷ் கூட பேசியிருப்பேன்” - எமோஷ்னலான தேவா

10 (12)

சமுத்திரம், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தேவாவிற்கு முரளி என்ற இன்னொரு தம்பியும் இருக்கிறார். சபேஷும் முரளியும் இணைந்து பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

சபேஷின் மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேவா, “சின்ன வயசுல இருந்தே சபேஷ் பேசவே மாட்டான். அமைதியாவே இருப்பான். கஷ்டத்தை கூட வெளிய சொல்ல மாட்டான். கடைசி நேரத்தில் கூட அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு சொல்லவே இல்ல, சொல்லாமலே போயிட்டான். அவன் பிறந்து 68 வயசுல இறந்தான். நான் ஒன்னு வெளிப்படையா சொல்றேன். இத்தனை வருஷத்துல அவன் கூட ஒரு மணி நேரம் தான் நான் பேசி இருப்பேன். 

Advertisment

ஒரு ஏரோப்ளேன் ஒரு இடத்துக்கு போய் சேரனும்னா சைடுல இருக்குற ரெண்டு ரெக்கை தான் முக்கியம். அந்த ரெண்டு றெக்கை தான் எனக்கு சபேஷும் முரளியும். அதுல ஒரு றெக்க போயிடுச்சு. ஆனா அவன் இன்னும் வீட்ல தூங்கிக்கிட்டு இருக்குற மாதிரி தான் தோணுது. எங்க குடும்பத்துல நாங்க எல்லாரும் ஒண்ணா இருப்போம். சபேசன் தான் எங்க குடும்பத்துல முதல் முதல்ல கீபோர்டு வாசிச்சவன். ஃபாரினுக்கு போனவன். ஸ்கூட்டர், கார், வீடு என எல்லாமே முதல் முதல்ல வாங்கினது அவன் தான். எனக்கு கூட அவன்தான் வீடு கட்டி குடுத்தான். இப்படி எல்லாமே முதல் முதல்ல செஞ்சவன் போகும்போதும் முதல்லயே போயிட்டான். அவன் இல்லனா நான் இல்ல. திருவிழாவில் அப்பா தோல் மேல தூக்கி தன் பையன காமிக்கிறது போல சபேஷும் முரளியும் தான் அவங்க தோள் மேல என்னை தூக்கி சினிமாவ காமிச்சாங்க. ஒரு அண்ணன் முறையில அவனை என்னால இன்னும் மறக்க முடியவில்லை” என எமோஷ்னலாக கண்கலங்கியபடியே பேசி முடித்தார். 

deva music director
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe