கேரளாவில் 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. படப்பிடிப்பிற்காக சென்ற அந்த நடிகையை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலில் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து பின்பு ஒரு இயக்குநர் வீட்டின் முன் இறக்கிவிட்டு தப்பி ஓடியது. 

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார், தொடர் விசாரணை நடத்தினர். இதில் பல்சர் சுனில் என்பவர் முதலாவதாக கைது செய்யப்பட்டார். இவர் தான் இந்த சம்பவத்தை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல மலையாள நடிகர் திலீப் பின்னாள் இருப்பது தெரியவந்தது. நடிகைக்கும் அவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாகவும் அதன் காரணத்தால் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் இவரை கைது செய்த போலீசார் 8வது குற்றவாளியாக சேர்த்தனர். 

Advertisment

இந்த வழக்கு தொடர்ந்து 8 வருடங்களாக நடந்து வந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. இதில் 8ஆவதாக சேர்க்கப்பட்ட திலீப், விடுவிக்கப்பட்டார். அவர் மீது சுமத்திய குற்றங்களில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்ததுது. 

திலீப்பின் விடுதலை கடும் விவாதத்துக்கு உள்ளானது. மலையாள நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இவர்களோடு பெண்கள் நல அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மலையாள நடிகர் சங்கம், எதிர்ப்பு தெரிவிக்காமல் நீதிமன்ற தீர்ப்பை எப்போதும் சங்கம் மதிப்பதாக தெரிவித்தது. இதனிடையே கேரளா அரசு சார்பில் திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். இப்படி பல்வேறு விவாதங்களை கிளப்பிய இந்த தீர்ப்பு தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. 

Advertisment

இந்த சூழலில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் குற்றவாளியான பல்சர் சுனில் என்பருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்பு மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.