சமீப காலங்களாக திரைப் பிரபலங்கள் தங்களது தனியுரிமை பாதுகாக்க கோரி நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். அதன் மூலம் தங்களது பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் தவறான ஏஐ உள்ளடக்கங்கள் தங்களுடைய அனுமதி இல்லாமல் வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி இனிமேல் அது தடுக்கப்பட வேண்டும் என தடை உத்தரவு பெற்று வருகின்றனர்.
இதுவரை கமல்ஹாசன், ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், கரன் ஜோகர் மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இவர்களைத் தாண்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவை பெற்றுள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது நடிகை கஜோலும் இணைந்துள்ளார்.
கஜோலின் தனியுரிமை பாதுகாக்க வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவரது பெயர், புகைப்படங்கள் ஆகியவற்றை அவரது அனுமதியில்லாமல் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரை தவறாக சித்தரிக்கும் ஆபாச உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/14-65-2026-02-20-17-41-11.jpg)